பாரின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக நம் பாரத நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் திகழ்கிறார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆவார்.
குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது தந்தையின் டீ கடையில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். அவர் இந்த தேசத்தின் பால் கொண்ட அன்பும் தொலைநோக்கு சிந்தனையும் அவரை இந்த தேசத்தை ஆளும் சிம்மாசனத்தில் அமர வைத்தது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் திரு.நரேந்திர மோடி அவர்கள் தோல்வியையும் சந்தித்தது இல்லை ஆட்சி அமைக்கவும் தவறியது இல்லை. தொடர்ந்து 13 வருட கால குஜராத் முதல்வர் அதனை தொடர்ந்து 6 வருடகால பாரத பிரதமர் என தலைமை பொறுப்பில் அவர் இருந்து வருகிறார்.
© 2020 Content Owned by BJP Tamilnadu, India (Disclaimer) All Rights Reserved