நமது வரலாறு​

ஜன சங்கத்தின் துவக்கம்

1951 ஆம் ஆண்டு திரு.சியாம பிரசாத் முகர்ஜி அவர்களால் தோற்றுவிக்கப்பது பாரத ஜன சங்கம், அப்போதைய பிரதமர் திரு.ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விலகி ஜன சங்கத்தை தோற்றுவித்தார். அடுத்த ஆண்டே அதாவது 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரத்தின் முதலாவது பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட ஜன சங்கம் 3 இடங்களை கைப்பற்றியது. பின்னர் 1953 ஆம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட திரு.சியாம பிரசாத் முகர்ஜீ அவர்கள் அதே ஆண்டு ஜூன் மாதம் சிறையிலேயே மர்ம காய்ச்சலால் இறந்தார் என அம்மாநில சிறைத்துறை தெரிவித்தது இன்றளவுவம் அவர் மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை. திரு.சியாம பிரசாத் முகர்ஜி அவர்களின் மறைவுக்கு பின்னர் திரு.பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் ஜனசங்கத்தின் பொதுச்செயலாளராக 15 ஆண்டுகள் பதவி ஏற்றுக்கொண்டு ஜன சங்கத்தை வளர்த்தார்.பின்பு 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அன்று லக்னோ நோக்கி ரயிலில் பயணித்து கொண்டிருந்தபோது உத்தரபிரதேசம் முகல்சராய் சந்திப்பு ரயில் நிலையத்தில் திரு.பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்கு பின்பு ஜன சங்கத்தின் தலைவராக திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து பெரும்பாண்மை இடங்களை கைப்பற்றிய ஜன சங்கத்தின் கூட்டணி திரு.மொரார்ஜி தேசாயை பிரதமராக கொண்டு காங்கிரஸ் அல்லாத மத்திய அரசின் ஆட்சியை முதன் முதலில் பாரதத்தில் நிறுவியது ஜன சங்கம். பின்னர் நடைபெற்ற உட்கட்சி பூசல்களால் ஜன சங்கம் கலைக்கப்பட்டது. பின்னாளில் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்தார். அன்று முதல் படி படியாக வளர்ந்த பாஜக தற்போது உலகின் மிக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

Inspirations

ஒருங்கிணைந்த மனித நேயமே நமது இலக்கு

"பாரின் ரதமாம்" பாரதத்தை பாதுகாக்க போராடும் ஒரே கட்சி
பாரதிய ஜனதா கட்சி

நமது நோக்கம் முடிவற்ற வானத்தைப் போல உயர்ந்ததாக இருக்க வேண்டும், மனதில் ஒரு தீர்மானத்தை வைத்துக்கொண்டு முன்னோக்கி நடந்து கொண்டே இருக்க வேண்டும் அப்போது வெற்றி நம்முடையதாக இருக்கும்.

காலவரிசை

ஜன சங்கம் முதல் பாரதிய ஜனதா கட்சி வரை

1951

ஜன சங்கம் தோற்றம்

திரு.சியாம பிரசாத் முகர்ஜீ அவர்களால் ஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்டது

1952

முதல் வெற்றி

பாரதத்தில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றியது ஜன சங்கம்

1953

முகர்ஜியின் மறைவும் உபாத்யாயா அவர்களின் தலைமையும்

காஷ்மீரில் அனுமதி இல்லாமல் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட சியாம பிரசாத் முகர்ஜி சிறையிலேயே மர்மமான முறையில் மரணமடைந்தார். பின்பு ஜன சங்கத்தின் பொது செயலாளராக பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.

1968

தீனதயாள் அவர்களின் மறைவும் வாஜ்பாய் அவரக்ளின் தலைமையும்

பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அன்று லக்னோ நோக்கி ரயிலில் பயணித்து கொண்டிருந்தபோது உத்தரபிரதேசம் ரயில் நிலையத்தில் திரு.தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்கு பின்பு ஜன சங்கத்தின் தலைவராக திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்.

1977

காங்கிரஸ் அல்லாத முதல் மத்திய ஆட்சி

இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து பெரும்பாண்மை இடங்களை கைப்பற்றிய ஜன சங்கத்தின் கூட்டணி திரு.மொரார்ஜி தேசாயை பிரதமராக கொண்டு காங்கிரஸ் அல்லாத மத்திய அரசின் ஆட்சியை முதன் முதலில் பாரதத்தில் நிறுவியது.

1980

பாரதிய ஜனதா கட்சியின் தோற்றம்

காங்கிரஸ் சூழ்ச்சி செய்து திரு.மொரார்ஜி தேசாய் அவர்களின் ஆட்சியை கலைத்தது பின்பு உட்கட்சி பூசல்களால் ஜனதா கட்சி கலைக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களால் பாரதிய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

மக்கள் சேவையில் ஈடுபட

இணைந்திடுவீர் பாரதிய ஜனதா கட்சி

மக்களுக்கான சேவையில் தங்களை இணைத்து கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றி பாஜகவில் இணைந்து கொள்ளலாம்

1. மிஸ்டு கால்

89-80-80-80-80
என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்

2. உறுப்பினர் எண்

உங்களுக்கு குறுந்தகவல் மூலம் உறுப்பினர் எண் கிடைக்கப்பெறும்

3. விபரங்கள் பதிவு

http://bjptn.com தங்களுடைய விபரங்களை இங்கே பூர்த்தி செய்யவும்